கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்‍கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, சலுகைகள் அளிக்‍கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Mar 30 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்‍கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகள் சட்ட விதிகளின் கீழ் சலுகைகள் அளிக்‍கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், தனது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாக தெரிவித்தார். டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடியும், அதானி நிறுவனம் 100 கோடியும் அறிவித்துள்ளன. பாலிவுட் நடிகர் அக்‍ஷய் குமார் 25 கோடி ரூபாய் அறிவித்துள்ளார்.

சிபிஐ பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்‍கு அளிப்பதாக அறிவித்துள்ளனர். ராணுவத்தின் முப்படை வீரர்களும், தங்கள் ஒரு நாள் ஊதியமான 500 கோடியையும், ரயில்வே ஊழியர்கள், தங்கள் ஒரு நாள் சம்பளமான 151 கோடியையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்‍கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகள் சட்ட விதிகளின் கீழ் சலுகைகள் அளிக்‍கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள் அளிக்‍கும் நிதியுதவி, கம்பெனி சட்ட விதிகளின் கீழ், சமூக செலவாக கருதப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00