கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சிறப்பு வழிபாடு

Dec 13 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பொன் ராஜா, அன்னதானம் வழங்கினார். இதில், கழக மீனவர் அணி செயலாளர் திரு.டி.ஆறுமுகம், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏ.குப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், புட்லூரில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.ஏ.ஏழுமலை, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், பாடியநல்லூரிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புழல் அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில் மற்றும் அம்பத்தூர் முருகன் வள்ளி தெய்வானை திருக்கோயில் ஆகிய கோவில்களில் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. கே.ஏ.மலைமேகம், அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.கே.எஸ்.வேதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி ஏர்போர்ட் பகுதிக் கழகம், 59-வது வட்ட கழக செயலாளர் திரு.மனோஜ்குமார் தலைமையில், மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு, மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் காலை உணவை வழங்கினார். இதில், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில், நகரச் செயலாளர் திரு. நெல்லைச்செல்வன் தலைமையில், கழகத்தினர் ஊர்வலமாகச் சென்று, ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து, வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர், இதில், பொறுப்பாளர்கள் குஞ்சாலி, செல்வின்லாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00