ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பான வழக்‍கு - தேவைப்பட்டால் சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

Dec 13 2019 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பான வழக்‍கை, தேவைப்படும் பட்சத்தில், சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஐஐடி-யில் மாணாக்‍கர்களின் தற்கொலையை சுட்டிக்‍காட்டியும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளதாலும், வழக்‍கை, சிபிஐ போன்ற தன்னிச்சையான அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடக்‍ கோரி, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர் திரு.என்.அஸ்வத்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்‍கல் செய்தார்.

வழக்‍கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை எனக்‍கூறி இன்று தள்ளுபடி செய்தது. அதேநேரம், ஃபாத்திமா லத்தீஃப் மரணம், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதன் காரணமாக போராட்டத்தையும் சந்திக்க வைத்ததாக நீதிபதிகள் திரு.எம்.சத்யநாராயணன், திரு.என்.ஷேஷசாயி அமர்வு தெரிவித்தது. அந்த அடிப்படையில், தேவைப்படும்பட்சத்தில் ஃபாத்திமாக வழக்‍கை சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

சென்னை ஐஐடி மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள மற்ற ஐஐடி நிர்வாகங்களும், இதுபோன்ற இறப்புகளை தவிர்க்‍க, மாணவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00