கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா : கோயில்களில் சிறப்பு வழிபாடு - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கல்

Dec 13 2019 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கழக பொதுசெயலாளர் திரு.டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, மயிலாப்பூர் பகுதி கழக செயலாளர் மயிலை திரு.A அர்ஜூனன் ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.குமரவேல், கழக இளைஞர் பாசறை மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.பில்டர் ராஜூ, அமைப்புசாரா ஒட்டுநர் அணி மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.ராஜா மணி, 171வது வட்ட கழகச் செயலாளர் திரு.அண்ணா துரை, மீனவர் அணி மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.சுகுமார்பாபு தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள பிடாரி மாங்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக மாணவரணி செயலாளர் ​அண்ணாநகர் திரு.பரணீஸ்வரன், அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் திரு.குணசேகரன், மாவட்ட நிர்வாகிகள் திரு. சுந்தரேசன், கங்கன், கருமாரி நீட்டா மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வட்ட செயலாளர்கள் திரு.குப்பன், தேவராஜ் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

தென் சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதிக்‍ கழகம் சார்பில், சைதாப்பேட்டையில் உள்ள பிடாரி இளங்காளியம்மன் ஆலயத்தில் உச்சிகால பூஜை நடத்தப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.விருகை T.S.கண்ணன் தலைமையில், சைதாப்பேட்டை பகுதி கழகச் செயலாளர் கோட்டூர்புரம் கந்தன் ஏற்பாட்டில் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 200க்‍கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டக்‍ கழக அவைத் தலைவர் திரு.சுந்தர்ராஜன், மாவட்ட துணை செயலாளர் திரு.சி.எம்.சாமி, 171வது கிழக்‍கு வட்டக்‍ கழக செயலாளர் திரு.யுவராஜ் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00