அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் : தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு, ஏழை-எளிய மக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கி கழகத்தினர் உற்சாகக்‍ கொண்டாட்டம்

Dec 13 2019 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு. டிடிவி.தினகரனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் தலைமையில், அயனாவரத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு. வெற்றிவேல் கலந்துக் கொண்டார். கோசாலையில் உள்ள இரண்டாயிரம் பசுக்களுக்கு எள்ளு, வெல்லம், பசும்புல் ஆகியவை வழங்கப்பட்டன. பகுதி கழகச் செயலாளர்கள் திரு. டி.வி. நாசர், திரு.பாண்டியன், திரு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென் சென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விருகைT.S. எஸ் கண்ணன், கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு. முருகன், வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வழிபாட்டில், ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் மடிப்பாக்கம் திரு. ராஜேந்திரன் தலைமையில், பள்ளிக்கரணை ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பக்‍தர்களுக்‍கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர்கள் திரு.கே.பி.ஆனந்தன், திரு. ராஜேஷ், திரு. தினேஷ், திரு. மலைராஜன், திரு. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் திருச்சி பாலக்கரை அன்னை நகரில் உள்ள தொடக்‍கப் பள்ளியில் பள்ளிக் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மாநகர் மாவட்டக்‍ கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00