தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் : மனு தாக்கல் வரும் 16-ம் தேதி கடைசி நாள்

Dec 10 2019 9:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய, வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 930 உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 13 ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி செயல் அலுவலகங்களில், முதல் நாளான நேற்று, 101 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்‍களை தாக்‍கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நடைபெற்ற கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியர் திரு.வினய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் கழகத்தினர் ஏராளமானோர், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி தலைவர் பதவியில் போட்டியிட, ஒன்றிய அலுவலகங்களில் விருப்பமனு படிவங்களை பெற்றுச் சென்றனர். மதுரை மேலூர் ஒன்றியத்தில், இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.ஆ.செல்வராஜ் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மேலூர் ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு படிவங்களைப் பெற்றுச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 157 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் ஆர்வமுடன் மனுக்‍களை வாங்கிச் சென்ற நிலையில், முதல் நாளான நேற்று, 113 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00