தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

Dec 9 2019 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்களில், மாற்றுக்‍கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர், கழகத்தில் தங்களை இணைத்துக் ‍கொண்டனர்.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், திட்டக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசிய வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. அக்ரி பி. முருகேசன், உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. சார்பாக போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து மனுக்களை வழங்க வேண்டும் என்றும், எதிர் வேட்பாளரின் தகுதி திறமை அறிந்து அதற்கு ஏற்றார்போல் கழக வேட்பாளர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்‍கொண்டார். இதில் திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி வடக்கு மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிமாங்குடி பஞ்சாயத்திலிருந்து, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தஞ்சை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. மா.சேகர் முன்னிலையில், அதிமுக, திமுக-வைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (தஞ்சை)
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00