ராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

Dec 6 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
போலி சான்றிதழ் மூலம் விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டில் மோசடியாக பணியில் சேர்ந்த வழக்கில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி சான்றிதழ்களை பெற்று, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகளில், பலர் வேலைக்கு சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து, திருச்சி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த கமுதியை சேர்ந்த மணிராஜ் என்ற காவலர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் போலி சான்றிதழ் வழங்கியவர் மற்றும் அதற்கு இடைத்தரகராக செயல்பட்ட இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற, காவலர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று பேர், போலி விளையாட்டு சான்றிதழ் வழங்கி இருப்பது, விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் முத்துமணி, முருகன், ராஜசேகர் ஆகிய 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00