ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு

Dec 6 2019 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழக உள்ளாட்சிகளுக்‍கு தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஊராட்சிகளுக்‍கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்‍கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்‍கான வேட்பு மனு தாக்‍கல் இன்று தொடங்கவிருந்தது.

இந்நிலையில், தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் குறித்து ஆலோசிக்‍கப்பட்ட பின்னரே புதிய அறிவிப்பானை வெளியாகும் என்றும், இதனால், ஊரக உள்ளாட்சிகளுக்‍கான தேர்தல் தேதி தள்ளிபோகும் என்றும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன. புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகும்போது நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆசியவற்றுக்‍கும் சேர்த்து தேர்தல் ​தேதி அறிவிக்‍கப்படலாம் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00