குன்னூரில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி - ஆலைகளுக்கு சீல் : தேயிலைத் தோட்ட விவசாயிகள் பாதிப்பு

Dec 6 2019 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூரில் தரமற்ற தேயிலை தூளை உற்பத்தி செய்த 17 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கிய நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு தேயிலை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலை விவசாயத்தில், 80 சதவிகிதம் பேர் இத்தொழிலை சார்ந்து உள்ளனர். அண்மையில் தென்னிந்திய தேயிலை வாரியம் நடத்திய சோதனையில், தரமற்ற தேயிலை தூளை உற்பத்தி செய்யும் 17 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து தேயிலை கொள்முதலை நிறுத்தியுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக்‍ கூறி, குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் திரு. பாலாஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் தேயிலை கொள்முதல் செய்யாத தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி, பிரச்னை தீர்க்‍க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00