சென்னை முகப்பேரில் தீபாவளி சீட்டு நடத்தி 5 கோடிக்கு மேல் மோசடி : தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.
Nov 21 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முகப்பேரில் தீபாவளி சீட்டு நடத்தி 5 கோடிக்கு மேல் பொருட்களை தராமல் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெஜெ நகர் காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியில் தீபாவளிக்கு சீட்டு பிடிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று 4 வருடமாக இயங்கி வருகிறது. இங்கு, மாதம் ரூ.1000 என 12 மாதங்களுக்கு கட்டினால் இறுதியில் 4 கிராம் தங்க நாணயம், 40 கிராம் வெள்ளி, பட்டாசு மற்றும் பரிசு பொருட்கள் தருவதாக தெரிவித்தனர். இந்நிலையில், சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த தீபாவளி நகை சீட்டு கட்டி வந்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசும், பரிசு பொருள் மட்டும் கொடுத்ததாகவும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, இந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளியை தருவதாக தனியார் சீட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த தனியார் சீட்டு நிறுவன ஊழியர்கள் நிலுவை தங்கம் மற்றும் வெள்ளியை தருவதற்கு 5 மாத கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் இருவரையும் சிறைபிடித்து வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.