கரூரில் உள்ள கொசு வலை தொழிற்சாலையில் 2-ம் நாளாக 40-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் சோதனை
Nov 16 2019 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் உள்ள கொசு வலை தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கரூர் வெண்ணெய் மலையில் உள்ள தனியார் கொசு வலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகம், உரிமையாளர் இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு சோதனையைத் தொடங்கி, இரவு 11 மணிக்கு முடித்தனர். இன்று இரண்டாவது நாளாக காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கொசு வலை தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.