உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகள் ஆலோசனை : கழகத்தினர் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை

Nov 16 2019 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இதில், கழகத்தினர் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக்‍ கூட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், பேரூராட்சிகள் என அனைத்து இடங்களிலும் கழகம் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்‍கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும், கழக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.கே.செல்வம், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சித் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சிதேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் பெரம்பலூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ். கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக தலைமைநிலையச் செயலாளர் ஆர்.மனோகரன், பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கழகத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மகத்தான வெற்றிக்கு பாடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டக்‍ சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.வ.து.ந.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍கூட்டத்தில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், கழக அமைப்பு செயலாளர்கள் திரு.வ.து.நடராஜன், திரு.ஜி.முனியசாமி, கழக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையா, முன்னாள் எம்எல்ஏ முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்ட திருப்புல்லாணி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஸ்டீபன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கழகத்தின் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கழக செயலாளர் திரு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய உறுதி ஏற்றனர். கழக அமைப்பு செயலாளர் திரு.கதிர்காமு, மாவட்ட கழக பொருளாளர் திரு.பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.இ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வீடு வீடாக சென்று கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை எடுத்துரைத்து, கழகத்தால் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஷ.ராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கழக பணிகளை ஆற்றுவது குறித்தும், எடப்பாடி அரசின் மக்கள்விரோத செயல்பாடுகளை எடுத்துரைத்து, கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பர்கூர் ஒன்றிய கழகம், பேரூராட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை நகர கழக அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன், கழக கோவை மண்டல பொறுப்பாளர் திரு.சேலஞ்சர் துரை, கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00