தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டம் - கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்பு

Nov 15 2019 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ச.கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், வரும் உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பாடுபடுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் திரு.மோகன், ஒன்றிய கழகச் துணைச் செயலாளர் திரு.சிவாஜி, மத்தூர் ஊராட்சி செயலாளர் திரு.பாலைய்யா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட கழகம் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் M.ரெங்கசாமி ஒன்றிய கழக செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட கழகத்தினரும் சார்பு அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதேபோல பாபநாசம் போரூர் கழக செயலாளர் திரு.பிரேம்நாத் பைரவ், ஒன்றிய செயலாளர்கள் திரு.பன்னீர்செல்வம் கும்பகோணம் நகர செயலாளர் திரு.குருமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் திரு.ராஜசேகரன் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அந்த அந்த பகுதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்து பகுதிகளிலும் கழகம் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என கழக துணைப் பொது செயலாளர் M.ரெங்கசாமி கேட்டுக் கொண்டார்.

ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.டி.தங்கராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00