வேலூர் அணைக்‍கட்டு பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சர் கே.சி.வீரமணியும் மோதல் - பொதுமக்‍கள் அதிருப்தி

Nov 15 2019 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூர் மாவட்டம் அணைக்‍கட்டு பகுதியில் முதலமைச்சர் குறைதீர்க்‍கும் நாள் கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமாரும், அமைச்சர் கே.சி.வீரமணியும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டது பொதுமக்‍களை முகம் சுளிக்‍கவைத்துள்ளது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவரைவொருவர் தாக்‍க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டு காவலர்கள் குவிக்‍கப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் அணைக்‍கட்டு பகுதியில் முதலமைச்சர் குறைதீர்க்‍கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில் அமைச்சர் திரு. கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சண்முகசுந்தரம், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்‍கூட்டத்தில் பேசி தி.மு.க எம்.எல்.ஏ திரு. நந்தகுமார், தனது தொகுதி மக்‍கள் புறக்‍கணிக்‍கப்படுவதாகவும் அம்பிகா என்ற பெண்மணிக்‍கு விதவை பென்ஷன் வழங்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்‍கிட்ட அமைச்சர் கே.சி. வீரமணி, தி.மு.க. எம்.எல்.ஏ. தனது கோரிக்‍கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால், அதனை ஆட்சியர் உடனடியாக சரிசெய்வார் என்றும், அதை விட்டுவிட்டு விளம்பரம் தேடும் நோக்‍கில் பேசவேண்டாம் என்றும் கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானது.

திமுக எம்.எல்.ஏ.வுக்‍கும் அமைச்சர் கே.சி. வீரமணிக்‍கும் ஏற்பட்ட வாக்‍குவாதத்தால் அணைக்‍கட்டு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்புக்‍காக போலீசார் குவிக்‍கப்பட்டனர். பொது இடத்தில் எம்.எல்.ஏ.வும் அமைச்சரும் மோதிக்‍ கொண்டது பொதுமக்‍கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00