புயலால் சேதமடைந்த விசைப்படகு மூழ்கியதால் கடலில் குதித்து உயிர்தப்பிய மீனவர்கள் - ஒரு மாத போராட்டத்திற்குப்பின் துறைமுகம் வந்தவர்களை கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்

Nov 15 2019 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது அடுத்தடுத்த புயல்களால் படகு மூழ்கி, ஒரு மாத போராட்டத்திற்குப்பின் துறைமுகம் வந்து சேர்ந்த கன்னியாகுமரி மீனவர்களை, உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களிலிருந்து, கடந்த மாதம், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கியார் புயலால், பல்வேறு துறைமுகங்களில் கரை ஒதுங்கினர். லட்சத் தீவுப் பகுதியில் உள்ள கல்பனி தீவில், 5 விசைப்படகுகள் கரை ஒதுங்கின. அடுத்து வந்த மஹா புயலில், ஒரு விசைப்படகு தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. புயலின் தாக்கம் குறைந்ததும், மற்ற 4 படகுகளுடன் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மீனவர்கள் வந்து சேர்ந்தனர். கல்பனி தீவில் சேதமடைந்த ஒரு படகு மற்றும் அதிலிருந்த 10 மீனவர்களை மீட்க, அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், வேறோரு படகை வாடகைக்கு ஏற்பாடு செய்து, சேதமான படகுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நடுக்கடல் வந்தபோது, பழுதடைந்த படகு கடலில் மூழ்கியது. அதிலிருந்த மீனவர்கள், கடலில் குதித்து உயிர் தப்பினர்.

பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு ஒருவழியாக நேற்று துறைமுகம் வந்துசேர்ந்த மீனவர்களை, உறவினர்கள், கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். படகு சேதமடைந்து தீவில் தத்தளித்தபோது, மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த மீனவர்கள், வாழ்வாதாரமின்றி தவிக்கும் தங்களுக்கு தற்போதாவது உதவ வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00