சென்னையில் டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு : 531 பேருக்கு டெங்கு பாதிப்பு - உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

Nov 9 2019 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு உதவி ஆணையர் பி.மதுசூதன் ரெட்டி பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் ஆயிரத்து 245 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 2,101 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3,346 பேர் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 531 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரியின் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுபடுத்தாத, 449 வீட்டு உரிமையாளர்களுக்கு 89 லட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00