அ.ம.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

Oct 18 2019 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் சூரம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பட்டது. இதில் மாநகர் மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.டி.தங்கராஜ் கலந்துகொண்டு பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் அவைத்தலைவர் திரு.நடராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.லோகநாதன், பெரியார் நகர் பகுதி கழகச் செயலாளர் திரு.ஜான், சூரம்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் திரு.திண்டல் முருகன், திரு.இளங்கோவன், மகளிரணி பொறுப்பாளர்கள் கோமதி, மனோன்மணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தருமபுரி மாவட்ட மாணவரணி சார்பில் தருமபுரி கடைவீதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி பழங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கழக செயலாளர் திரு.டி‌கே. ராஜேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநிலத் தலைவர் திரு.ஆர்.பாலு, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் திரு.எஸ். பார்த்திபன் தருமபுரி நகர கழக செயலாளர் திரு.டான்சில்க் மணிவண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொன்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட கழகம், கும்பேகேணம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் 22 இடங்களில் பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பாலமுருகன் தலைமையில் சுவாமிமலை பேரூராட்சி, தாராசுரம் பேரூராட்சி உள்ளிட்ட 22 இடங்களில் கழக துணைப் பொது செயலாளர் திரு. M ரெங்கசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00