டெங்கு காய்ச்சலை தடுக்‍க தீவிர நடவடிக்‍கை - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து விநியோகம்

Oct 17 2019 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி கழகம் சார்பில், காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் திரு.வெற்றிவேல், பேரூர் கழக செயலாளர் திரு.கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. அறிவழகன், இணை செயலாளர் திரு.சமரசம், மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் திரு. சாபுதீன், மாவட்ட இலக்கிய அணி பிரிவு மாவட்ட செயலாளர் திரு. டி.கே. ராஜரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் திரு.ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி திருமதி லட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மத்திய மாவட்ட மகளிரணி சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ் வெங்கடாஜலம், சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி அனிதா உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திரளான பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு, நிலவேம்பு குடிநீரை வாங்கி பருகினர்.

கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் ரூபநாராயண நல்லூர் பகுதியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி. கிருஷ்ணன் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.அக்ரி.பி.முருகேசன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை வழங்கினார். கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர் ராஜா பழனிவேல், மாவட்ட அவைத்தலைவர் திரு.கே.பி.கலையரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக ரூபநாராயண நல்லூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் திரு.அக்ரி.பி முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இலத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திரு. பாரதி பாபு தலைமையில், கூவத்தூர் பேருந்து நிலையம், கடைவீதி, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்தில் பயணிப்பவர்களுக்‍கு நிலவேம்பு குடிநிர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கழகச் செயலாளர் திரு.மோகன்ராஜ், மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட அக்ரஹாரம் பகுதி சார்பில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. டி.தங்கராஜ், கனிராவுத்தர் குளம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் திரு. நடராஜன், மகளிரணி செயலாளர் கல்பனா, அக்ரஹாரம் பகுதி பொறுப்பாளர்கள் ஷாஜகான், நேரு, ஒன்றியச் செயலாளர் திரு. பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகரக்‍ கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை மாவட்டக்‍ கழக செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரக் கழகச் செயலாளர் தியா. ஆனந்தகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00