தூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்

Oct 17 2019 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் சந்தை சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தேங்கிக்‍கிடக்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக கிளைச் செயலாளர் காசிலிங்கம் மழை நீரில் குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், தூத்துக்‍குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாட்டை குளிப்பாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள தாமரை நகர் குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சிரமத்திற்கு ஆளான மக்கள், விடிய விடிய கண்விழித்து நீரை அப்புறப்படுத்தினர். மேலும், திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00