சென்னையில் கன மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் : அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் - வானிலை மையம்

Oct 17 2019 8:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை, கோண்டூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பூமி குளிர்ச்சியடைந்து குளிர்ந்த காற்று வீசியது.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லித்தோப்பு , கோரிமேடு , முத்தியால்பேட்டை, வில்லியனூர், திருபுவனை, மதகடிபட்டு, பாகூர், காலப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூம்பாறை, வில்பட்டி, செண்பகனுர், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்தது. இந்த மழைக்கு கொடைக்கானல் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரது வீடும், பூம்பாறையைச் சேர்ந்த தங்கம் என்பவரது வீடும் சேதமடைந்தன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முழுவடும் கனமழை பெய்தது. இதனால் நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ,பூம்புகார், கீழ்வேளூர் ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெரம்பலூர் மாவட்டத்தின் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், 4 ரோடு, குன்னம், வேப்பூர், சிறுவாச்சூர், நாரணமங்கலம், இரூர், பாடாலூர், செட்டிகுளம், சத்திரமனை, உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் முக்கிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மதுரை புறநகர் பகுதிகளான மேலூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், திருமங்கலம் , விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும், ஆனையூர் , கோரிப்பாளையம், அண்ணாநகர், செல்லூர் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதிலும் நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. தொடர் மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல தேங்கி நின்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00