பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் - இடைக்கால குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

Oct 16 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முழு உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று, பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை, சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிபிஐ, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, 5 பேரை கைது செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்‍கால குற்றப்பத்திரிக்‍கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், இடைக்கால குற்றபத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00