வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு நாள் : வரும் 16ம் தேதி மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்‍கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்

Oct 9 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு நாள் வரும் 16ம் தேதி கடைபிடிக்‍கப்படுவதை முன்னிட்டு, மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய விடுதலைப் போரில் தனியிடம் பெற்றவரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியோடு போரிட்டவரும், சுதந்திரத்திற்காக தன் உயிரையே விலையாக கொடுத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவுநாள் வருகிற அக்‍டோபர் 16-ம் தேதி புதன்கிழமை கடைபிடிக்‍கப்படுகிறது - இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணி அளவில் மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தலைமைக்‍ கழக நிர்வாகிகள், மாவட்டக்‍ கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக்‍கழக, கிளைக்‍ கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்க வேண்டும் என தலைமைக்‍ கழக அறிவிப்பில் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00