பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங்பிங் சந்திக்‍க உள்ளதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நேரில் ஆய்வு

Sep 21 2019 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாமல்லபுரத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு ந‌டைபெற உள்ளதை அடுத்து, தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம், டி.ஜி.பி. திரு. திரிபாதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி - சீன அ‌திபர் ஜி ஜின்பிங் ஆகியோர், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலாத் தலமான மாமல்லபுர‌த்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இதையொட்டி, அண்மையில், சீனாவைச் சேர்ந்த பாதுகாப்பு‌த் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இன்று, தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம், தமிழக டி.ஜி.பி., திரு. திரிபாதி ஆகியோர், மாமல்லபுர‌த்தில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், காவல் துறை உயரதிகாரிகளும் உடன் சென்றனர்.

இவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், சீன வெளியுறவுத் துறையைச்‍ சேர்ந்த 30 அதிகாரிகளும் சென்றனர். கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ளதாகக் ‌கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00