சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்

Sep 21 2019 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருமதி. தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஏற்றுள்ளார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக திரு. வினீத் கோத்தாரி நியமிக்‍கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திருமதி. வி.கே. தஹில் ரமாணி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தஹில் ரமானி, தனது பதவியை கடந்த 6ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் நீதிமன்ற பணிகளையும் அவர் கவனிக்‍கவில்லை. தலைமை நீதிபதி இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், திருமதி. தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்‍கொண்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக திரு. வினீத் கோத்தாரி நியமிக்‍கப்பட்டுள்ளார். வினீத் கோத்தாரியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, வரும் 23ம் தேதி, அவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயா தலைமை நீதிபதி திரு. அஜய்குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய, கொலிஜியம் அமைப்பு சிபாரிசு செய்துள்ள போதிலும், குடியரசுத்​தலைவர், அதற்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00