திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : 27 ஆண்டுகளுக்கு பிறகு 24 பேர் குற்றவாளிகள் என நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

Sep 19 2019 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 27 ஆண்டுகளுக்கு பிறகு, 24 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. 1974-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டு காலகட்டத்தில், இக்‍கோயிலில் உள்ள பெருமாள் திருமேனி மீது சாத்தப்பட்டிருந்த 8 கிலோ தங்க அங்கியை சிலர் வெட்டி எடுத்து கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக கடந்த 1992-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார், 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து அப்போது 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் நீதிமன்றத்தில், வழக்‍கு விசாரணையின்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்‍கில், 151 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், 24 பேர் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ்டியான் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00