நாடுதழுவிய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - பெரும்பாலான இடங்களுக்‍கு பொருட்களைக்‍ கொண்டுசெல்வதில் சிரமம்

Sep 19 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களுக்‍கு பொருட்களைக்‍ கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்‍கணக்‍கான லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், 34 ஆயிரம் லாரிகளில் 80 சதவீதம் இயக்‍கப்படாமல் நிறுத்திவைக்‍கப்பட்டுள்ளன. இதனால் 15 கோடி ரூபாய் அளவிலான சரக்குகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதோடு, ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு வாடகை இழப்பும் ஏற்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்‍கல்லில், லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால், 4,500 லாரிகள் இயக்‍கப்படவில்லை. இதனால் ஆயிரக்‍கணக்‍கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், 10​ கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகரில் 10 ஆயிரம் லாரிகளும், புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் 25 ஆயிரம் லாரிகளும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 25 கோடி ரூபாய் அளவுக்‍கு வர்த்தகம் பாதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00