நெல்லையில், சந்தை வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு - 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Sep 12 2019 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில், சந்தை வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை டவுனில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தையில், காய்கறிகள், பலசரக்கு பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தையில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தினமும் காய்கறி பழங்கள் பலசரக்கு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, இங்குள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டுவதற்காக நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பாவை சந்தித்து, தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரவேண்டும் எனவும், புதிய மார்க்கெட் தயாரான பிறகு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க வேண்டுமெனவும் கோரி ஏற்கெனவே மனு அளித்தனர். எனினும், மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வரும் 15-ம் தேதிக்குள் கடைகளை காலி செய்து கொடுக்குமாறு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர். கடைகளை காலி செய்வதற்கு, தங்களுக்‍கு 6 மாதங்கள் அவகாசம் அளிக்‍க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00