வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தியும், கூடுதலாக பணம்கேட்டு பெண்ணை அடித்து உதைத்த தி.மு.க. பிரமுகர் - கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தல்

Sep 11 2019 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியும் கூடுதல் தொகை கேட்டு தி.மு.க. பிரமுகரால் தாக்‍கப்பட்ட இளம் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். தாக்‍குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை கைது செய்ய பாதிக்‍கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக தி.மு.க. நிர்வாகி கோபிநாத் என்பவரிடம் வட்டிக்‍கு பணம் பெற்றுள்ளார். இதற்காக அவர் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்தும், கார்த்திக்‍குமார் கொடுத்த ஒப்பந்தப் பத்திரம் மற்றும் காசோலையை கோபிநாத் திருப்பிக்‍ கொடுக்‍காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் கூடுதல் பணம் கேட்டு கார்த்திக்‍குமாருக்‍கும், அவரது மனைவிக்‍கும் கோபிநாத் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்‍கப்பட்ட கார்த்திக்‍குமாரின் மனைவி ஜெசில்லா மாநகர காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்துள்ளார். மேலும் தனக்‍கு இழைக்‍கப்படும் கொடுமை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகர் கோபிநாத், குண்டர்களை ஏவிவிட்டு கார்த்திக்‍குமார் வீட்டில் புகுந்து அவரது மனைவியை கடுமையாக தாக்‍கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இளம்பெண்ணை அடித்து உதைத்து அராஜகம் செய்த தி.மு.க. பிரமுகரை கைது செய்ய வேண்டும் என அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00