கோயில்களில் ஓணம் சிறப்பு வழிபாடு : தமிழகத்திலும் களைகட்டிய ஓணம் கொண்டாட்டங்கள்

Sep 11 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மக்‍களின் முக்‍கிய பண்டிகையான ஓணம் பண்டிகை, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மலையாள மொழி பேசும் மக்‍களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் புத்தாடை உடுத்தி குடும்பம் குடும்பமாக ஏராளமான மக்‍கள் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாபலி சகரவர்தியை வரவேற்கும் விதமாக பொதுமக்‍கள் வீடுகளில் அத்தப்பூ கோலங்கள் இட்டு, திருவோண பண்டிகையை கொண்டாடினர். நாகர்கோவிலில் உள்ள ஆதி பாரசக்தி கோயிலில் ஏராளமான பெண்கள் கேரளா பாரம்பரிய உடைகளுடன் அத்தபூ கோலங்கள் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. புத்தாடை அணிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாலை வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. மேலும் மதியம் ஓணம் சதயா கோவிலில் வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், பீமநகர், கண்டோன்மென்ட், உறையூர், ஏர்போர்ட் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழிபேசும் மக்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னரை வரவேற்றனர். கண்டோன்மென்ட் ஐய்யப்பன் ஆலயத்திலும் ஏராளமானோர் வழிபாடு மேற்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00