சென்னையின் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை - திருச்சி, கடலூர் மாவட்டங்களிலும் இரவு முதல் பெய்த மழையால் இதமான சூழல்

Sep 11 2019 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதிகள் மற்றும் திருச்சி, கடலூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

கேரளாவையொட்டிய தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்துவரும் அதேநேரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில், சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளான பூந்தமல்லி, போரூர், திருநின்றவூர் போன்ற இடங்களில் இன்று அதிகாலையில் மழை பெய்தது. சிலமணிநேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. சென்னையிலும் சில இடங்களில் லேசான தூரல் காணப்பட்டது.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், உறையூர், தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மணப்பாறை, சமயபுரம் போன்ற இடங்களிலும் நேற்றிரவு மழை பெய்தது. இதனால் அங்கு குளிர்ந்த காற்று வீசியது.

கடலூர் மாவட்டத்தில் ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம், செம்மண்டலம் சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. கடும் வெயில் வாட்டிய நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதனிடையே, அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00