சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாறுதலை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Sep 10 2019 7:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாறுதலை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி இடமாறுதலை கொலிஜியம் திரும்ப பெற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதில் மதுரை கிளையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். மேலும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல திருச்சியில் தஹில் ரமணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுடப்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் திருச்சி தலைமை நீதிமன்றம் மற்றும் துறையூர், லால்குடி, மணப்பாறை, முசிறி நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் 3,500 பேர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 22 நீதிமன்றங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களது நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00