தமிழகம் முழுவதும் நடைபெறும் காவலர் பணிக்‍கான எழுத்துத் தேர்வு - சுமார் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப 3 லட்சத்துக்‍கும் அதிகமானோர் பங்கேற்பு

Aug 25 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவலர் பணிக்‍கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. 8 ஆயிரத்து 800-க்‍கும் மேற்பட்ட இடங்களுக்‍கான தேர்வை 3 லட்சத்துக்‍கும் அதிகமானோர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 8 ஆயிரத்து 888 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. சென்னை உட்பட 228 மையங்களில் சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.

சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரி என 13 மையங்களில் 19 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2 ஆயிரத்து 429 பெண்களும்​ தேர்வில் பங்கேற்றுள்ளனர். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெறும் தேர்வில், பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அங்கு மட்டும் 2 ஆயிரம் பெண்கள் தேர்வு எழுதுகின்றனர்.

ராமாபுரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள தேர்வு மையத்தில், தேர்வு எழுத தாமதமாக வந்த சிலர், சோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் 9 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட இடங்களில் 8 மையங்கள் அமைக்கபட்டுள்ளன.

தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெறும் தேர்வை 25 ஆயிரத்து 185 பேர் எழுதுகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறும் தேர்வை 10 ஆயிரத்து 616 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு.அமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00