வாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 22 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் வரும் 26-ம் தேதிக்‍குள் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் வசிக்கும் காலனியில் அமைந்துள்ள இடுகாட்டில் போதிய வசதிகள் இல்லாததாலும், ஊருக்‍கு நுழைவாயில் உள்ளதாலும், அப்பகுதியில் மரணமடைந்தவர்களுக்‍கு இறுதிச்சடங்கு செய்ய முடியாத சூழல் காரணமாக, பாலாற்றங்கரையில் எரியூட்டுவது வழக்கம். இந்த நிலையில், நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்த​தை அடுத்து, அவரது சடலத்தை பாலாற்றங்கரைக்‍கு கொண்டு சென்றபோது, அப்பகுதியில் சடலம் கொண்டு செல்ல எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வேறு வழியின்றி சடலத்தை கயிறு கட்டி பாலத்தின்மேல் இருந்து கீழே இறக்‍கி எரியூட்டிய அவலம் ஏற்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தை தாமாக வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடுகாடு இடம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வரும் 26ம் தேதிக்‍குள் விளக்‍கம் அளிக்‍க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த வாணியம்பாடி வட்டாட்சியர் திரு.முருகன், இடுகாட்டுக்‍கு 50 சென்ட் நிலம் ஒதுக்‍கப்படுவதாகவும், தகன மேடை உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00