இஸ்லாமியர்களின் மத அடையாளமான தொப்பியை கேலி செய்யும் விதமாக பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன்

Aug 22 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுக பொருளாளர் திரு.துரைமுருகன் இஸ்லாமியர்களின் மத அடையாளமான தொப்பியை கேலி செய்யும் விதமாக பேசியது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் திமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.துரைமுருகன் கலந்துகொண்டார். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. முகமது அபுபக்கர் வருவதற்கு தாமதமானது. சிறிதுநேரம் கழித்து திரு.அபுபக்கர் வந்தபோது, 'தொப்பிய வரச்சொல்லுங்க', தொப்பி இருந்தால்தான் காஷ்மீர்போல இருக்கும் என அவரை திரு.துரைமுருகன் கிண்டல் செய்தது திரு.அபுபக்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியாளர் சந்திப்பில் திரு.துரைமுருகன் அமராமல், திரு.அபுபக்கர் தள்ளி தனியாக அமர்ந்தார். இஸ்லாமியர்களின் மத அடையாளமான தொப்பியை காஷ்மீர் விவகாரத்தோடு திரு.துரைமுகன் ஒப்பிட்டு பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில், சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் மொழி அர்த்தம் தெரியாமல் அடிக்கடி மாவட்ட ஆட்சியரிடம், திரு. துரைமுருகன் அர்த்தம் கேட்டுக்கொண்டது நகைப்புக்குரியதாக இருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00