சிவகங்கையில் பிளாஸ்டிக்‍ பயன்பாட்டை குறைக்‍க வலியுறுத்தி விழிப்புணர்வு - சிறுவன் சேமித்த பணத்தில் துணிப்பைவாங்கி பொதுமக்‍களுக்‍கு இலவசமாக விநியோகம்

Aug 21 2019 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிளாஸ்டிக்‍ பயன்பாட்டை குறைக்‍கவும், அதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்‍கள் மத்தியில் ஏற்படுத்தவும், சிவகங்கையில் சிறுவன் ஒருவன் தான் சேமித்தப் பணத்தைக்‍ கொண்டு துணிப்பையை வாங்கி பொதுமக்‍களுக்‍கு இலவசமாக விநியோகம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்-பொன்மலர் தம்பதியினர். பொறியாளர்களான இவர்கள், துபாயில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் குமார் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், விடுமுறையையொட்டி தனது சொந்த கிராமமான நாலுகோட்டை கிராமத்திற்கு குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் தனது கிராம மக்‍களுக்‍கு பிளாஸ்டிக்‍ பயன்பாட்டை குறைக்‍கவும், அதுப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளான். இதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக்‍ கொண்டு, 5 ஆயிரம் துணிப் பைகளை வாங்கி பாஸ்டிக் எனும் நெகிழியால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, துணிப்பைகளை இலவசமாக விநியோகம் செய்து வருகிறார். இன்று மக்கள் அதிகம் கூடும் சிவகங்கை சந்தைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயகாந்தன் முன்னிலையில் பொதுமக்களுக்கு, துணிப்பையை இலவசமாக வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00