7 தலைமுறைகள் சங்கமித்த குடும்ப விழா - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Aug 19 2019 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஏழு தலைமுறை வாரிசுகள் ஒன்றிணைந்த குடும்பவிழாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழா, பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த, முத்துநல்லியப்பன் என்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, தனது குடும்பத்தின் 7 தலைமுறை வாரிசுகளை தேடும் பணியில் ஈடுபட்டார். இவரது குடும்பத்தின் முதல் தலைமுறை முதல் தற்போது உள்ள குடும்பம் வரை அனைத்து வாரிசுகளையும் தேடினார். அதன்படி 1824 முதல் தற்போது வரையிலான குடும்ப வாரிசுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து, அவர்களை ஒன்றிணைத்து, குடும்ப விழா நடத்தினர். இந்த விழாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஒன்று கூடி தங்களது அன்பை பகிர்ந்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழர் கலச்சாரம், பண்பாடு, கூட்டு குடும்ப முறை, கிராம வாழ்க்கை உள்ளிட்டவற்றை எடுத்துரைத்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00