கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சி - சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனம்
Aug 14 2019 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் அடிப்படை வசதிகள் இன்றி துண்டிக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சியில் 5 நாட்களாகியும் சீரமைப்பு பணிகள் தொடங்காததால் கிராம மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர்-பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 8 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கபட்டன. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து 5 நாட்கள் ஆகியும் ஓவேலி பேரூராட்சி பகுதியில் மீட்பு குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் சீரமைப்பு பணியை துவங்குவதில் மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாலையில் விழுந்த ராட்சத மரங்கள் அகற்றபடாமலும், மின் விநியோகம் மற்றும் தொலை தொடர்பு, வாகன போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்காமல் உள்ளதாலும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.