நாட்டின் 73வது சுதந்திர தினத்தை யொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து - நாட்டிற்காக இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூறுவோம் என வாழ்த்து செய்தி

Aug 14 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், நாம் அனைவரும் எப்போதும் நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய இந்திய தேசத்தின் 73வது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலைக்காக தங்களுடைய உயிர், உடல், பொருள் ஆகியவற்றைத் தியாகம் செய்து, நமக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தந்த மாவீரர்களையும், தியாகிகளையும் இந்நாளில் நன்றியோடு நினைவு கூர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குடிமகனும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்று முழுமையான விடுதலையைப் பெறுகிற தினமே உண்மையான விடுதலை நாளாகும் - அதற்காக, பெற்ற விடுதலையைப் பேணி பாதுகாக்க வேண்டிய கடமை நம் கரங்களிலே இருக்கிறது - விடுதலையின் ஆணி வேராக இருக்கிற மக்களாட்சியின் மாண்பினை ஒரு கை விளக்கினைப் போல காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை காலம் நமக்கு முன்னால் வைத்துள்ளது - ஏனெனில் இந்திய திருநாட்டின் பெருமைமிகு அடையாளம் ஜனநாயகம்தான் - அந்த ஜனநாயகத்திற்குத் தீங்கு நேராமல் தடுத்திடுவதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரப்போரில் முதல் அடி எடுத்து வைத்து, இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்தது நம் தமிழ்நாடு என்ற உணர்வோடு, நம்முடைய உரிமைகளைக் காத்து நின்று தமிழனாக, இந்தியனாக தலைநிமிர்ந்து வாழ்ந்திட விடுதலைத் திருநாளில் உறுதியேற்போம் என்றும் திரு. டிடிவி தினகரன், தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00