நாட்டின் சுதந்திர தின விழா நாளை கோலாகல கொண்டாட்டம் - முக்‍கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை

Aug 14 2019 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் முக்‍கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம், முக்கிய சாலைகள் மற்றும் விழா நடைபெறும் கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் திரு.நாராயணசாமி தேசியக்‍கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை மற்றும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி கடற்பகுதியில் கடற்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00