மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்

Sep 9 2017 8:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்‍கூறி, ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான​2 பேரை தேடும் பணி தீவிரமாக்‍கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளார் ராணி என்பவர், 9-ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் காணாமல் போய்விட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது மகள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரில் உள்ள உறவினர் வீட்டில் 6 மாதகாலமாக தங்கியிருந்து, பின்னர் கடந்த மாதம் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பிய மகளுக்‍கு அடிக்‍கடி வயிறு வலி ஏற்பட்டதைத்​தொடர்ந்து, தாயார் ராணி விசாரணை செய்துள்ளார். பின்னர், நடந்ததைக்‍ கூறிய அவரது மகள், வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ், பாண்டியன், சுரேஷ் சித்ரா ஆகியோர் போதை ஊசி போட்டு பலமுறை கூட்டாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த தாயார் ராணி, மருத்துவர் ஜெயபிரகாஷ், பாண்டியன், சுரேஷ் சித்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்‍கோரி புகார் அளித்தார்.

இது சம்மந்தமாக அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் மற்றும் பாண்டியனை ஆரணி அரசு மருத்துவமனையில் சென்னை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சுரேஷ் மற்றும் சித்ரா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00