மயிலாடுதுறை பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : பட்டாசு குடோன் உரிமையாளர் மோகனை கைது செய்து காவல்துறை நடவடிக்கை
Oct 4 2023 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை அருகே வாண வெடிகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
பொறையார் அருகே உள்ள தில்லையாடி பகுதியில் காளியம்மன் கோயில் தெருவில் அப்பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான வாண வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாண வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில், மாணிக்கம், மதன், ராகவன், நிகேஷ் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த, 4 பேர் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், குடோன் உரிமையாளரான மோகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.