தேனி அருகே தெருமுனை மற்றும் விவசாய நிலங்களில் தேங்கும் கழிவு நீர் : கிராம சபை கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என கிராம மக்கள் எச்சரிக்கை
Sep 28 2023 7:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் தெருமுனை மற்றும் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கின்றன. ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் செல்ல வழி இல்லாததால் ஸ்ரீரங்கபுரம் வடக்கு தெரு பகுதியிலும், அருகே உள்ள விவசாய நிலங்களிலும் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளன. இதுகுறித்து பலமுறை கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.