திண்டுக்கல் அருகே காலி இடத்தை தராததால் மூதாட்டி வீட்டுப் பாதையை முட்களால் அடைத்த நபர்கள் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை
Sep 28 2023 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, தனது வீட்டுப் பாதையை முட்கள் கொண்டு அடைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு விராலிப்பட்டி கிராமத்தில் முருகாயி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் சிலர், முருகாயி வீட்டின் அருகில் இருக்கும் காலி நிலத்தை விற்பனைக்கு கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால் அந்த நிலத்தை முருகாயி தர மறுத்ததால், அவரது வீட்டிற்கு செல்லும் பாதையை எதிர் தரப்பினர் முட்கள் கொண்டு அடைத்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், வேதனை அடைந்த மூதாட்டி, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனது இடத்தை மீட்டுதரவேண்டும் என்றும், இல்லையென்றால் தன்னை கருணை கொலை செய்யும் படியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.