கோவை அருகே குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்தில் சிக்கி துண்டான ஊழியரின் கால்கள் : காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை
Sep 28 2023 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உள்ள எந்திரத்தில் சிக்கி ஊழியர் ஒருவரின் கால்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா என்பவர், வெள்ளலூர் குப்பை கிடங்கில் பணியாற்றி வருகிறார். இவர், குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்தை துடைத்துக் கொண்டிருந்தபோது, அவர் இருப்பதை கவனிக்காமல் சக ஊழியர் எந்திரத்தை இயக்கியதால், சத்யா அந்த எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டார். இதில் அவரது இரு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி சிதைந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.