துறை மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய புகாரில் உதகை அரசு கலை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
Sep 28 2023 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உதகை அரசு கலை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உதகை அரசு கலை கல்லூரியில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர, 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை, கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகியோர் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர் மாணவர்களிடம் தங்கும் விடுதிக்கு பரிந்துரை கடிதம் வழங்கவும் அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2 பேரையும் கல்வி இணை இயக்குனர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.