திருச்சி அருகே அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு : அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்ததால் விபத்தில் சிக்கிய பரிதாபம்

Sep 23 2023 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மண்ணச்சநல்லூரில் அரசு பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவன் கீழே விழுந்ததில் கால் விரல்கள் துண்டானது. மண்ணச்சநல்லூரை சேர்ந்த விஜயகுமாரின் மகன் நிசாந்த் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அத்தாணியிலிருந்து அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்து கூட்டமாக இருந்ததால் மாணவன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளான். மண்ணச்சநல்லூர் கடை வீதியில் பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது. தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் படுகாயமடைந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00