திருப்பூர் அருகே கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு : கன்னிமார் கோயில் பின்புறம் கரைபுரண்டோடும் வெள்ளம் - தீவிர கண்காணிப்பு
Sep 23 2023 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில், கோயில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.