காஞ்சிபுரம் அருகே அந்தரத்தில் கிழிந்து தொங்கும் விளம்பரப் பதாகைகள் : அச்சத்துடன் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
Sep 23 2023 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சாலையோரத்தில் அந்தரத்தில் கிழிந்து தொங்கும் ராட்சத விளம்பர பதாகைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரகடம் பகுதி சாலையோரங்களில் விதிகளை மீறி சுமார் 30 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள ராட்சத விளம்பரப் பதாகைகள், சில கிழிந்து அந்தரத்தில் தொங்கியவாறு காட்சியளிக்கின்றன. மேலும் சில விளம்பரப் பதாகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை இயக்கி செல்கின்றனர். எனவே ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.