ஏற்காட்டில் தொடர் கனமழை காரணமாக நிரம்பிய நீர் நிலைகள் : அருவிகளில் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
Sep 23 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர். ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் ஏற்காடு மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, நான்காவது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பிரித்துக் கொட்டுகிறது. இதனால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீராடியதுடன், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.